August 6, 2021

செக்காணூரணி அருகே, தடை செய்யப்பட்ட 19கிலோ குட்கா புகையிலை பறிமுதல், ஒருவர் கைது…

1 min read

மதுரை மாவட்டம் செக்காணூரணி போலீசாருக்கு ககருமாத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்ஹா மற்றும் புகையிலைகள் விற்பனை செய்யப்படுதாக வந்த தகவலை அடுத்து சப்இன்ஸ்பெக்டர் முருகராஜ், எஸ்.எஸ்.ஐ. நாகராஜ், மற்றும் ஏட்டு கண்ணன் உள்ளிட்ட போலீசார் கருமாத்தூர் பகுதியில் உள்ள கடைகளிலே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மெயின் ரோட்டில் உள்ள பலசரக்கு தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை அடுத்து கடை உரிமையாளர் ஜெயபாண்டி (38) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 19,500 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் – சுரேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed