August 6, 2021

நாகமலை புதுக்கோட்டையில், மோட்டர் பம்ப்செட்டில் அருகே, விளையாடி கொண்டிருந்த, 8 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தால், பரிதாபமாக உயிரிழந்தார்…

1 min read

மதுரை மாவட்டம் உத்தங்குடி சேர்ந்தவர் சிவபாலன் வழக்கறிஞரான இவர், இன்று காலை தனது மகன் அனிரூத்தை (8) அழைத்து கொண்டு, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொடிமங்கலம் தீர்த்தகரை பிரிவில் தென்னந் தோப்பில் காவல்காரராக உள்ள தனது தந்தை மலைச்சாமியை பார்க்க சென்று உள்ளார்.

அப்போது, அனிரூத் வீட்டிற்கு பின்புறம் உள்ள விவசாய மின்மோட்டர் பம்ப் செட் பக்கம் சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பம்ப் செட்டில் மின்வயரை எதிர்பாராத விதமாக தொட்டதால், அனிரூத் மீது மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அனிரூத்தின் தந்தை சிவபாலன் மற்றும் அங்கிருந்தவர்கள் மின்சாரம் தாக்கி மயக்க நிலையில் கிடந்த தனது மகனை, மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவன் அனிரூத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அனிரூத் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் – சுரேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed