August 6, 2021

விருதுநகரில், புதிய காவல் சோதனை சாவடி திறப்பு விழா, எஸ்பி மனோகர் திறந்து வைத்தார்…

1 min read

விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆத்துமேடு சிறிய ரயில்வே பாலம் அருகில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனை சாவடியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மாரிராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா, சார்பு ஆய்வாளர்கள் நாகராஜ், முருகேசன் மற்றும் தொழிலதிபர்கள் கேபிள் அசோக், ஏஎஸ் கே ரமேஷ் குமார், நாடார் மகாஜன சங்க துணைச் செயலாளர் கனகரத்தினம், தமிழ் விருந்து தங்கபாண்டியன் உட்பட காவல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நிர்மலா பெண்கள் வழிப்பறி, மற்றும் ஈவ்டீசிங்லிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது, அவசரமாக காவல்துறையை எப்படி அணுகுவது என்று விளக்கமளித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed