September 16, 2021

அம்பத்தூர் இசக்கியம்மன் ஆலயத்தில் நன்னீராட்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம் ஓம் சக்தி நகர் இராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் மற்றும் ஓம் சக்தி இசக்கியம்மன் ஆலயத்தில் செந்தமிழ் ஆகவ திருக்குட நன்னீராட்டு விழா ஆலய நிர்வாக செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில், பிள்ளையார் முதல் நிலை, நவகோள், தீபத்திருமகள், நிலபதி, மண், புனிதநீர், சதாசிவ, வாயிர்காவலர், திருபள்ளி எழுச்சி, பெரும் பேரொளி போன்ற வேள்விகள், வழிபாடுகள் நடை பெற்றது. பின்னர் திருக்குடங்கள் நிறுவுதல், காப்பு கட்டுதல், என் மருந்து சாற்றுதல், முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளத்துடன் திருக்குடங்கள் புறப்பட்டு விமானம் மற்றும் வெற்றி விநாயகர், இசக்கியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நன்னீராட்டு செய்து தீபாராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனிதர் தெளித்தனர்.

விழாவிற்கு  சிறப்பு அழைப்பாளராக அம்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஜோசப்சாமுவேல், பாமக மாநில இளைஞரணி செயலாளர் ஜெ.குருஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில்  வட்ட செயலாளர் சுந்தர்ராஜன், 82-வது வட்ட 36 வது பாகமுகவர் ருக்மாங்கதன், மகேஷ், மூர்த்தி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

செய்தியாளர் –
ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed