September 25, 2021

கும்மிடிப்பூண்டியில், எம்எல்ஏ-விற்கு தகவல் தராமல், ஆய்விற்கு வந்த வனத்துறை அமைச்சரால் பரபரப்பு…

1 min read
Spread the love

தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கும்மிடிப்பூண்டியில் ஆய்வு மேற்கொண்ட போது ஆய்வு குறித்து கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு ஆய்வு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை அதனால், அதிருப்தியில் திமுகவினர் அமைச்சரை வரவேற்க வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் உள்ள வனத்துறையின் நாற்றங்கால் தோட்டத்தினை ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.
இந்த ஆய்வு குறித்து கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு அமைச்சர் சார்பிலோ, வனத்துறை சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் தொகுதிக்கு முதல் முறையாக வனத்துறை அமைச்சர் வந்தும் தொகுதி திமுக எம்எல்ஏக்கு தகவல் இல்லையே என்கிற அதிருப்தியில் திமுகவினர் யாரும் நிகழ்விடத்தில் அமைச்சரை வரவேற்க வரவில்லை. திமுக அமைச்சர் வருகை தந்த நிகழ்வில் திமுக எம்எல்ஏவிற்கு அழைப்பு இல்லாதது கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ராமசந்திரபுரத்தில் நாற்றங்கால் தோட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழக முதல்வர் வன பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது மொத்த நிலத்தில் 22சதவீதம் வனமாக உள்ளதை 10ஆண்டுகளில் 33சதவீதமாக உயர்த்த இலக்கினை நிர்ணயித்து உள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசியவர் 1லட்சத்து 30ஆயிரத்து 60ஹெக்டேர் பரப்பில் இந்த வருடம் 4லட்சத்து 50ஆயிரம் மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டு உள்ளதாகவும், வருடத்தில் 1சதவீதம் வனத்தை அதிரித்து 10வருடத்தில் 23சதவீதத்தில் இருந்து 33சதவீதமாக வனத்தை அதிகரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பேசியவர் கும்மிடிப்பூண்டி ராமச்சந்திராபுரத்தில் நாற்றங்கால் தோட்டத்தில் மகாகனி, வேம்பு, மகிழம், பூவரசு, நாவல், இலுப்பை போன்ற மரங்களின் 5அடி உயர நாற்றுகள் 10,372 வளர்க்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டு 4,000 மரக்கன்றுகள் இங்கிருந்து பல்வேறு பகுதிகளில் நடப்பட்டுள்ளதாக கூறியவர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 25ஆயிரம் நாற்றங்கால் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறினார். வனப்பகுதியை வன உயிர்களை காக்க வனத்துறையில் அதிக வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்ப உள்ளதாகவும், மசினக்குடி உள்ளிட்ட பகுதியில் யானைகளின் வழிதடத்தில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்ரீ, முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் கர்ணப்ரியா, உதவி வன பாதுகாப்பாளர் கில்பர்ட், மாதர்பாக்கம் வன சரகர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – ,8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed