September 16, 2021

சோழவந்தானில், பாம்பு கடித்து இறந்த மகனுக்காக, நிவாரணம் வாங்கிக் கொடுப்பதாக தாயிடம் மோசடி செய்தவர் கைது…

1 min read
Spread the love

சோழவந்தான் அருகே சின்ன இரும்பாடியைச் சேர்ந்தவர்கள் பிரபு-தமிழ் செல்வி தம்பதியர். கடந்த மார்ச் மாதம், இவர்களின் மகன் நவீன் குமார் பாம்பு கடித்து இறந்து விட்டான். இந்நிலையில் நேற்று முன் தினம் இவர்களின் வீட்டிற்கு சென்ற சேலம் மாவட்டம் சின்னக் கொல்லம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன்(37) என்பவர், தான் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளார்.

மேலும், இறந்த அவரது மகனுக்கு 7.5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு தனக்கு 25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய தமிழ் செல்வி தற்போது 6 ஆயிரம் ரூபாய் உள்ளதாக கூறவே, அதை வாங்கிச் சென்ற பிரபாகரன் மீதி பணத்தை வாங்குவதற்காக நேற்று மீண்டும் வந்துள்ளார்.

இது குறித்த தகவலனின் பேரில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், எஸ்.ஐ.ராஜேந்திரன் மற்றும் போலீசார், மகனைப் பறிகொடுத்த தாயிடம் மீண்டும் பணம் வாங்குவதற்காக வந்த பிரபாகரனை பிடித்து விசாரித்தனர். அதில், விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தாரிடம் , போலி அடையாள அட்டையை காட்டி, நிவாரணம் வாங்கிக் தருவதாக ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – சுரேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed