September 16, 2021

திருவள்ளூர் மாவட்டம், செங்கழுநீர் மேடு கிராமத்தில் உயர் மின் கோபுர விளக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கழுநீர் மேடு கிராமத்தில் உயர் மின் கோபுர விளக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்பட்டது. அதானி அறக்கட்டளையின் சமூக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட முதன்மை அலுவலர் அனில் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி மின் விளக்கை இயக்கி ஒளிரவைத்தார்.

அதானி அறக்கட்டளை திட்ட மேலாளர் வினோத் ராஜ், திட்ட அலுவலர்கள் மெய்யப்பன், தயாநிதி, தீன்சா, ஹேமந்த், மஞ்சு மற்றும் வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜி.கோபி, ஒன்றியக் கவுன்சிலர் மகாலட்சுமி பிரகாஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ், வார்டு உறுப்பினர்கள் கோகுலகண்ணன், ஜீவிதா தனசேகர், ராதிகா வெங்கடேசன், சௌந்தரி ரமேஷ் மற்றும் செங்கழுநீர்மேடு கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed