September 25, 2021

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் இருவேறு கருத்துக்களை கூறி திமுக அரசியல் செய்கிறது, அண்ணாமலை பேட்டி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
இந்து மதத் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்தது. அதன் எதிரொலியாக தமிழக அரசு பாதிரியாரை தற்போது கைது செய்துள்ளது.

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி ஒதுக்கீடு விவகாரத்தில் ஜூன் மாதம் ஒதுக்கீடாக அறிவித்தது 41லட்சம் தடுப்பூசிகள். ஆனால் ஜூன் மாதத்தில் 52 லட்சம் டோஸ் தடுப்பு ஊசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் பொழுது மத்திய அரசு சிறப்பாக ஒத்துழைப்பு தருவதாக தமிழக அமைச்சர்கள் ,கூறுகிறார்கள்.

ஆனால், சென்னை வந்தவுடன் மத்திய அரசு பாராமுகமாக செயல்படுவதாகவும் இருவேறு கருத்துக்களை கூறி தடுப்பூசி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed