September 16, 2021

ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கொரோனா குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி எம்.பி.கே. புதுப்பட்டியில் சோலைசேரி மற்றும் அம்மையப்பபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி எம்.பி.கே. புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று (24.07.2021) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எம்.எல்.ஏ எடுத்துக் கூறினார். மேலும், நாம் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என, அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் கிளை செயலாளர் முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed