September 26, 2021

கும்மிடிப்பூண்டி தொழிலதிபரின் சார்பில், ஏழை எளியோருக்காக கட்டப்பட்ட வீட்டை, கோவிந்தராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லயன்ஸ் கிளப் நிர்வாகியும், பாரத் ஆக்சிஜன் நிறுவன தலைவருமான ஜெ.கிளமென்ட் அவரது சொந்த முயற்சியில், ஏழை எளியோர்க்கு வீடு கட்டி தரும் நிலையில், 27வது வீட்டை கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.பி.முனுசாமி நகரில் செல்வி என்பவருக்கு 1.30லட்சம் மதிப்பீட்டில் கட்டி தந்தார்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த, பாரத் ஆக்சிஜன் நிறுவத்தின் தலைவர் ஜெ.கிளமெண்ட். இவர் கடந்த சில வருடங்களாக கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதியில் ஏழை எளியோருக்கு அவரது சொந்த செலவில், 1.30லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தந்து வருகிறார். அந்த வகையில், இவரது சார்பில் 27வது வீடு கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.முனுசாமி நகரில், செல்வி என்பவருக்கு கட்டி தரப்பட்டது.

அந்த வீட்டை திறந்து பயனாளிக்கு ஒப்படைக்கும் விழா தொழிலதிபர் கிளமெண்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு லயன்ஸ் கிளப் கவர்னர் ஆர்.ஸ்ரீதரன், முதர்நிலை கவர்னர் பி.வி.ரவிந்திரன், சேர்மேன் சிவகுமார், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சுதாகர், ஜெயராமன், பரந்தாமன், சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் நிர்வாகி சிந்து கிளமெண்ட் வரவேற்றார்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ வும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் வீட்டை திறந்து வைத்து பயனாளிக்கு வீட்டின் சாவியை ஒப்படைத்து, ஏழை எளியோர்கள் 27பேருக்கு வீடு கட்டி தந்த தொழிலதிபர் ஜெ.கிளமெண்டின் அவர்களின் சேவையை பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ் , கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.ரித்து, திமுக நகர செயலாளர் அறிவழகன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணை தலைவர் குணசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வின் போது பயனாளி மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தொகுப்பை தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட் வழங்கினார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed