September 26, 2021

கும்மிடிபூண்டி அருகே, மகள் படிப்பிற்கு வாங்கிய கடன் பிரச்சனையால்,தாய் மகள் தூக்கிட்டு தற்கொலை…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சி திடீர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கீதாஞ்சலி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், பிகாம் பட்டதாரியான இவரது மகள் சிவரஞ்சனி(24) தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார்.

இந்நிலையில் கீதாஞ்சலியின் தங்கையான பெங்களூரைச் சேர்ந்த ராஜலட்சுமி (45) கடந்த ஒரு வாரமாக கீதாஞ்சலியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் திங்களன்று காலை ராஜலட்சுமி திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு மூடி உள்ளதை கண்டு ,கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கப்படாத காரணத்தினால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, ஒரே மின் விசிறியில் தாய் கீதாஞ்சலி மற்றும் மகள் சிவரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அனைவரும் அதிர்ந்தனர். இதுகுறித்து, கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞரான கீதாஞ்சலி கையில் வைத்திருந்த கடிதத்தை போலீஸார் பிரித்து படித்த போது கீதாஞ்சலி மகளுடன் போதிய வருமானம் இன்றி தவித்த தாகவும், தன் மகள் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வரும் நிலையில் அதற்காக கடன் வாங்கி இருந்த நிலையில் கடனை செலுத்த இயலாமல் தவித்து வந்த நிலையில், 10ஆண்டுக்கு முன் இவரது கணவன் இறந்த பிறகு மாமனார் வீட்டில் எந்த உதவியும் செய்யாததாலும் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அவருக்கு சொந்தமான நிலத்தை விற்று கடன் தந்தவர்களின் கடனை அடைக்க அவரது தங்கை ராஜலட்சுமியிடம் கூறியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாஞ்சலி அவரது மகள் சிவரஞ்சனி கடன் தொல்லையால் தற்கொலை செய்தனரா அல்லது கடன் தந்த அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed