September 25, 2021

கும்மிபூண்டி அருகே, டி.ஜெ.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிப்பு….

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி, டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி இணைந்து நடத்திய மறைந்த முதல்வர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு நாள் நிகழ்வு டி.ஜெ.எஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், ,துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு டி.ஜெ.எஸ்.கல்வி குழும இயக்குனர்கள் டாக்டர் ஏ.பழனி, ஏ.விஜயகுமார், ஏ.கபிலன், டி.தினேஷ், ஜி.தமிழரசன் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ-வுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நிகழ்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அப்துல் கலாம் குறித்து பேசினார்கள். மேலும் மாணவர்கள் அப்துல் கலாம் வாழ்கையை விளக்கும் நாடகத்தை நடித்து காட்டினர். பின்னர் மாணவர்கள் யோக பயிற்சியை செய்து காட்டினர்.

தொடர்ந்து பள்ளியில் 10,12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் கோப்பை , சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசை வழங்கிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி கல்வியில் சிறந்து விளங்கினால் ஒரு நாட்டின் உயரிய பதவியே அவரை தேடி வரும் என்பதற்கு உதாரணம் என கூறியவர் அப்துல் கலாம் இந்த தேசத்திற்கு மட்டுமல்லாமல் உலக நாட்டு மாணவர்களின் வழிகாட்டி என்றார்.

இந்த நிகழ்வில் டிஜெஎஸ் கல்வி குழும உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம், ஆர்.ஜெயக்குமார், ஏ.ராஜேஷ், நிர்வாக அலுவலர் எஸ்.ஏழுமலை, டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் பி.ஞானபிரகாசம், டி.ஜெ.எஸ்.பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சரவணன் தியாகராஜன், டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பிச்சைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed