September 16, 2021

கும்மிடிப்பூண்டியில், சென்னை சமூக சேவை சங்கத்தினரால், உலக முதியோர் தின விழா கொண்டாட்டம்…

1 min read
Spread the love

பாதிரிவேட்டில், சென்னை சமூக சேவை சங்கத்தினரால் நடத்தப்பட்ட உலக முதியோர் தின விழாவிற்கு சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் அருட் தந்தை எம்.வி.ஜேக்கப் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு பாதிரியார் சார்லஸ் டேவிட் இம்மானுவேல், பாதிரிவேடு ஊராட்சி தலைவர் என்.டி.மூர்த்தி, துணை தலைவர் ஈஸ்வரி பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு , சென்னை சமூக சேவை சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன்,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்ற முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 150 முதிவர்களுக்கும் புடவை, வேட்டி, சட்டை, போர்வை உள்ளிட்ட பொருட்களை சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் அருட்தந்தை எம்.வி.ஜேக்கப் வழங்கினார்.

தொடர்ந்து, விழாவில் பேசிய சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் அருட்தந்தை எம்.வி.ஜேக்கப் பேசுகையில், முதியோர் பருவம் இரண்டாவது குழந்தை பருவம் என்றும் இதனை அனைவரும் உணர்ந்து முதியோரை அன்போடும் பரிவோடும் பராமரிக்க வேண்டும் என்றதோடு, கரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் வகையில் அரசிற்கு முதியோரின் பங்கேற்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

முதியோர் தின விழாவை ஒட்டி அனைவருக்கும் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டதோடு, அனைவருக்கும் சென்னை சமூக சேவை சங்கத்தின் மூலம் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சென்னை சமூக சேவை சங்கத்தை சேர்ந்த பகுதி ஒருங்கிணைப்பாளர் கவிதா, ஷோபா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய பெண்கள் கூட்டமைப்பு தலைவிகள் ஜெயமாலை, சுந்தரம்மாள், உமா, பூபதி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed