September 16, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில்  பௌவுர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மலையை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் கிரி வலத்திற்கு தடை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாம் நிலை கொரோனா தோற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசாங்கம் பல தளர்வகளை அளித்து வந்த நிலையில் இந்த மாதம் 5-ஆம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாம் தேதி திறக்கப்பட்ட அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு பௌர்ணமி வந்ததை முன்னிட்டு இன்று அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் , மேற்பார்வையில் உதவி ஆணையர் ஜான்சிராணி , மற்றும் உதவி ஆணையர்  ராமு (மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில்) மேற்பார்வையில், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ஐயம்பிள்ளை மற்றும் பத்ராச்சலம் , உள்துறை மணியம் செந்தில், கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்களால் உண்டியல்களில்  பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகள் என்ன பட்டது. 

அண்ணாமலையார் ஆலயத்தில் இருக்கும் உண்டியல்களில் தங்கம், வெள்ளி, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.  அதில்

 தங்கம் -354 கிராம். 

வெள்ளி  – 512 கிராம் 

 உண்டியல் தொகை ரூ. 79,74,868.00 காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தி இருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed