September 26, 2021

ராஜபாளையத்தில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி மேலப்பாட்ட கரிசல் குளம் ஊராட்சி சமத்துவபுரம் அருகில்,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு (864 வீடுகள்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை, குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், ராஜப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று காலை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், வீட்டின் உள் அமைப்பில் கழிப்பறை வழியாக சமையல் அறைக்கு செல்வது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனை படுக்கை அறை வழி கழிப்பறைக்கு செல்வது போல் மாற்றி அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தங்கபாண்டியன் எம்.எல்.ஏ கூறினார், அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் முதன் முதலாக குடிசை மாற்று வாரியம் என ஒன்று ஏற்படுத்தி வீடு இல்லாத ஏழை எளிய பொதுமக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் அவர்கள் வழியில் தமிழக முதல்வர் அவர்கள் குடிசை மாற்று வாரியம் மூலம் ஏழை எளிய பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறார்.

மேலும், சமத்துவபுரம் அருகில் அமைக்கப்பட்டு வரும் குடியிருப்பில் நீர்பிடிப்பு பகுதியில் வீடு கட்டியவர்களுக்கும் வீடோ, நிலமோ இல்லாத பொதுமக்களுக்கும் தகுதியின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் இறுதி பட்டியல் தயார் செய்து அதன்பின்பு பயனாளிகள் ஒவ்வொருவரும் 46,000 ரூபாய் அரசுக்கு செலுத்திய பின் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படும் என, கூறினார். அதற்கு முன் வேறு யாரிடமும் பொதுமக்கள் ரூபாயை கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும் இப்பணிகள் எல்லாம் முடிந்து தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படும் எனக் கூறினார்.

இந் நிகழ்வில் குடிசை மாற்றுவாரிய உதவி செயற் பொறியாளர் மஜீத் உதவி பொறியாளர் ஜேம்ஸ் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed