September 25, 2021

ஆரம்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், ஊராட்சி துணை தலைவர் சிலம்பரசன், நொச்சிக்குப்பம் கிராம நிர்வாகிகள் தேசிங்கு, அங்கமுத்து, வருவாய் ஆய்வாளர் வைத்யலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ், கிராம உதவியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் போது பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த துண்டு பிரசுரங்களை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ் வழங்கினார்.

இதனை தொடர்ந்து ஆரம்பாக்கம் ஊராட்சி நொச்சிக்குப்பம் படகுதுறையில் மீனவர்களுக்கு மழை வெள்ள பாதிப்பு குறித்தும், ஆபத்து நேர முன் எச்சரிக்கைகள் குறித்தும், முதலுதவி குறித்தும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விளக்கினர். இந்நிகழ்வில் வருவாய் துறையினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed