September 25, 2021

திருவண்ணாமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, ஆம்புலன்சுக்கு அபராதம் விதித்த காவல்துறை…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், தனியார் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறாக, சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆகவே, காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவலர்கள் அங்கு சென்று, அங்கிருந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுநர்களும், இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனங்களும் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக, அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அகற்றப்பட்டு, அந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed