September 26, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் வாயிலாக ரூ.47.32 இலட்சம் நலத்திட்ட உதவிக்கான தொகைகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்…

1 min read
Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக, 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 2007 தொழிலாளர்களுக்கு ரூ.47.32 இலட்சம் மதிப்பில் திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான தொகைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகியோர் இன்று வழங்கினர்.

பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்களால் 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2006 முதல் 2011 வரை 15 தனி நலவாரியங்கள் முன்னாள் மறைந்த முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்கள்; உருவாக்கினார். மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 01.09.2006 அன்று முதல் டாக்டர்.கலைஞர் அவர்களளால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்கள் துவங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக 15.09.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டது.

இவ்வாறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்கிறது. இதனைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் வழியினை பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும், என தெரிவித்து, இன்று சென்னையில் 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, இன்று திருவள்ளுர் மாவட்டத்தில், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 2007 தொழிலாளர்களுக்கு, ரூ.47,32,250 தொகைக்கான திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலவிதமான சலுகைகள், உயிர் கவசங்கள், விபத்து நிவாரணம் உள்ளிட்ட ஊக்கங்களும் வருங்காலங்களில் மேலும் கூடுதலாக செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருவள்ளுர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) சார்பில் கல்வி உதவி தொகை 189 பயனாளர்களுக்கு ரூ.3,77,750 ம், திருமண உதவித்தொகை 116 பயனாளர்களுக்கு ரூ.4,10,000 ம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 37 பயனாளர்களுக்கு ரூ.8,85,000-ம், விபத்து மரண உதவி தொகை 1 பயனாளருக்கு ரூ.1,02,000-ம், ஓய்வூதியம் உதவித்தொகை 1157 பயனாளர்களுக்கு ரூ.11,57,000 ம் ஆக மொத்தம் 1500 தொழிலாளர்களுக்கு ரூ. 29,31,750 மதிப்பிலும்,

பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) சார்பில் கல்வி உதவித்தொகை 128 பயனாளர்களுக்கு ரூ.2,16,500 -ம், திருமண உதவித்தொகை 14 பயனாளர்களுக்கு ரூ.54,000 ம்; இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 45 பயனாளர்களுக்கு ரூ.11,09,000 ம், மேலும், விபத்து மரண உதவித்தொகை 1 பயனாளருக்கு ரூ.1,02,000 ம், 319 பயனாளர்களுக்கு ரூ. 3,19,000 – ஆக மொத்தம் 507 தொழிலாளர்களுக்கு ரூ.18,00,500 மதிப்பில் என மொத்தம் 2007 பயனாளர்களுக்கு ரூ.47,32,250 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழுத்துணைத் தலைவர் தேசிங்கு, தொழிலாளர் உதவி ஆணையர்கள் (ச.பா.தி) அ.சி.கௌரி ஜெனிஃபர் (திருவள்ளுர்), பு.இராமகிருஷ்ணன் (பொன்னேரி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed