September 26, 2021

புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில், மழைநீர் தேங்காமல் இருக்க, போர்கால நடவடிக்கைகள் தீவிரம்…

1 min read
Spread the love

வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அதனால்,செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் ஏற்கனவே மழை நீர் அதிகம் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்டறிந்து, அவைகளை சீரமைக்கும் பணியை, ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் அவர்கள் போர்கால நடவடிக்கையாக துவங்கி உள்ளார்.

அந்த ஊராட்சியில் அடங்கிய 1-வது வார்டு  சாதிக்பாட்ஷா தெரு, மற்றும் 3-வது வார்டு,  சர்ச்  தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டி, ரப்பீஸ் கற்களை நிரப்பி தெருக்களை ஜெசிபி இயந்திரம் மூலம் சீர்செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். இப்பணியின் போது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருண்குமார் வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணிசரவணன், நாகஜோதிவாசுதேவன், தரணிதரன், கீதாவிஜி, ஊராட்சி  செயலாளர் யுகேஷ்குமார் ஆகியோர்  உடனிருந்தனர்.

மேலும், போர்கால  நடவடிக்கையாக ஊராட்சி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பாக பணிகளையாற்றி வரும் ஊராட்சி தலைவர் கவிதாடேவிட்சன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களை  அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார் 
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed