September 25, 2021

பெரியபாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராசன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும். நீங்கள் ஊராட்சியில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த பிரச்சனையை உங்களோடு இணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் தயாராக உள்ளோம் என அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் கேட்டுக்கொண்டார்.

அப்போது மதுரவாசல் ஊராட்சி மன்ற தலைவர், திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி மாவட்ட பொருப்பாளர் டி. ஜெ. கோவிந்தராசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவேளி முரளி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, கூட்டமைப்பு தலைவர் தண்டலம் ரவி,மாவட்ட
மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமன்,

புரி வாக்கம ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா மணிகண்ட பிரபு, கோடுவேளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார், மாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன், தாமரைபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன், வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன், உள்ளிட்டோர் பலர் கலந்துக்கொண்டனர்,

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed