September 25, 2021

ராஜபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியன் அவர்களின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு, எம்.எல்.ஏ தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று காலை (31.07.2021) ஐயா வே.தங்கப்பாண்டியன் அவர்களின் திருவுருவ புகைப்படத்திற்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்வையும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் ஷியாம்ராஜா மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் ஞானவேல் வைரம் மாவட்ட, நகர அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed