September 25, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரம்மோற்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது…

1 min read
Spread the love

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் ஆலயம் பிரம்மோற்சவ கொடியேற்ற உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி பின்புறம் உள்ள உற்சவ மூர்த்தியான பராசக்தி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு உற்சவ மூர்த்தியான விநாயகர் பராசக்தி அம்மன் தங்க கொடி மரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .

அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரே உள்ள 52 அடி உயர தங்க கொடி மரத்தில் இன்று காலை சரியாக 6-32 மணி அளவில் கிருத்திகை நட்சத்திரம் கடக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பெரிய பட்டம் சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்களால் துவஜாரோகணம் என்று அழைக்கப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. ஆண்டு முழுவதும் அண்ணாமலையார் ஆலயத்தில் நான்கு முறை கொடி ஏற்றப்படுவது வழக்கம் மூன்று முறை அண்ணாமலையாருக்கு ஒரு முறை பராசக்தி அம்மனுக்கும் கொடியேற்ற நிகழ்வு நடைபெறும்.


இந்த ஆடிப் பூர பிரம்மோற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் காலை மாலை இருவேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதி உலா வருவது வழக்கம் தற்போது கொரோனா தொற்று காரணமாக அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே பக்தர்கள் இன்று வலம் வரும்.

கடைசி உற்சாகமான பத்தாம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் நள்ளிரவு வேளையில் உலகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத ஒரு நிகழ்வு அண்ணாமலையார் ஆலயத்தில் பராசக்தி தீ மிதி திருவிழா நடைபெறுவது உலகப்பிரசித்தி பெற்றதாகும். அன்று இரவு உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு நைவேத்தியமாக மூலிகை மருந்து நெய்வேத்தியம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் காரணத்தால் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed