September 25, 2021

திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலை கோயிலில், தமிழ் முறைப்படி பூஜை செய்ய அனுமதிக்க ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் கடந்த 30 ஆண்டுகளாக செல்லப்ப சுவாமிகள் தமிழ் முறைப்படி பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை நீக்கிவிட்டு சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய அறநிலையத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

இந்நிலையில், எல்லப்ப சுவாமிகள் திருவண்ணாமலை கோயிலில் கடந்த காலங்களில் ஜெனரேட்டர், தண்ணீர் மோட்டார், யுபிஎஸ், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஆகியவற்றை வாங்கி வைத்திருந்தார். தற்போது அந்த பொருட்கள் அங்கு காணாமல் போனது மேலும், அந்த காணாமல் போன பொருட்களை திரும்ப பெற்று தர கோரியும், மீண்டும் தம்மை திருநேர் அண்ணாமலை கோயில் தமிழில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed