September 16, 2021

தென்காசி மாவட்டத்தில், பணியின் போது உயிர்நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்…

1 min read
Spread the love

தென்காசி மாவட்டம், காவல்துறையில் இணைந்து காவல் பணியின் போது மரணம் அடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் மாரியப்பன் மற்றும் தென்காசி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரிந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் நடராஜன் ஆகிய மூன்று காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3,00,000/- க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்கள் வழங்கினார். பின்பு இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறை எப்போதும் தங்கள் குடும்பத்திற்கு துணை நிற்கும் என்று ஆறுதல் வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed