September 25, 2021

புளியங்குடியில் விற்பனைக்காக, புகையிலை பொருட்களை கடத்தி வந்த 5 பேர் கைது, 8,50,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்…

1 min read
Spread the love

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் செங்கண் (50) என்பவர் சேலத்திலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டதில், ஒரு மோட்டார் சைக்கிள், ஆட்டோ, மினி லோடு வேன்கள் உட்பட 5 வாகனங்களில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் 1,320 kg கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மேற்படி விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த செங்கண் (50), மற்றும் வாகன ஓட்டுனர்க ளான சேர்ந்தமரத்தை சேர்ந்த குமார் (31), கடையநல்லூரை சேர்ந்த துரை (40), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜ் (45) வெங்கடாசலம் கோவிந்தராஜ் (22) ஆகிய ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 8,50,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 12,00,000 பணம் மற்றும் 10,00,000 மதிப்பிலான 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed