September 26, 2021

ராஜபாளையம் பகுதியில் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தங்கபாண்டியன் எம்.எல்.ஏ பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் தளவாய்புரம் ஊராட்சி பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் பேரணியையும் நமது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று (03.08.2021) காலை 10 மணி அளவில் தொடங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ இந்தியாவில் தமிழகத்தை கொரோனாவில் இருந்து பாதுகாகக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கட்டுக்கோப்பாக தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழி நடத்தி வருகிறார் என கூறினார்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் , தனி மனித இடைவெளியை பின்பற்றி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரச்சாரத்தை வீடு வீடாகவும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடமும் பொதுமக்களிடமும் எம்.எல்.ஏ அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஊரக தலைமை மருத்துவர் கருணாகரபிரபு வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed