September 16, 2021

தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர் நியனங்களில்
தலித் கிறிஸ்தவர்ளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
தலித் திருச்சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்…

1 min read
Spread the love

இந்திய தலித் திருச்சபை கலந்தாய்வு கூட்டம், சேலம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு- ஒருங்கிணைப்பாளர் ஞா.மேத்யு தலைமை வகித்தார். கிறித்தவ மக்கள் களம் ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ், தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம் செயலாளர் லாரன்ஸ், துரும்பர் விடுதலை இயக்கம் அல்போன்சா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தியூர்.பார்த்திபன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒருங்கிணைப்பாளர் ஞா.மேத்யு கூறியதாவது;
இந்தியாவில் 174 மறை மாவட்டங்களும், தமிழகத்தில் 18 மறை மாவட்டங்களும உள்ளன. ஒவ்வொரு மறை மாவட்டத்திற்கும் ஒரு ஆயர் என கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் நியமித்துள்ளது. இந்தியாவில் 180 ஆயர்கள் உள்ளனர். இவர்களில் 10 பேரும் தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயர்களில் ஒருவர் மட்டுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

தமிழ் நாட்டில் 3 பேராயர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. இந்திய அளவில் 31 பேராயர்கள் உள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 12 ஆயர்கள் நியமனம் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் கூட தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஆகவே, தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர் நியனங்களில் சாதி தீண்டாமையை கடைபிடிக்காமல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். தலித் கிறிஸ்தவர்கள் சாதி இந்துக்களால் மட்டுமல்லாமல், சாதி கிறிஸ்தவர்களாலும் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். எனவே தலித் கிறிஸ்தவர்கள் அதிகார மையத்திற்கு வர வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி நுன்சியோ அறிவித்துள்ளார்.

எனவே தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இனி வரும் அனைத்து ஆயர் பணியிடங்களில் மட்டும் அல்லாமல் தற்போது காலியாக உள்ள ஆயர் பணியிடங்களிலும் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed