September 26, 2021

திருவண்ணாமலையில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்கள் இன்று (04.08.2021) திருவண்ணாமலை வேங்கிக்கால் பால் குளிரூட்டும் மையத்தில், தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். 4 வது நாளாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்களை வழங்கினார். முககவசம் அணிவது மற்றும் சோப்புகளால் கைகளை சுத்தம் செய்வது போன்ற பல்வேறு பிரச்சாரங்கள் செய்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் 4 வது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருநங்கைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து, அவர்களையும் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு வழங்க வேண்டி கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed