September 25, 2021

பொன்னேரியில் கொரோனாவில் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

கொரோனாவின் மூன்றாவது அலை பரவலை எதிர் கொள்ளும் விதமாகவும், அதை கட்டுப்படுத்தும் விதமாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களிடம் கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அதைபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த பிரச்சாரத்தை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பொன்னேரி பேருந்து நிலையம் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி, கொரோனா வின் மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்த கருத்துக்களைக் கூறினார்.

மேலும், பேருந்து உட்பட வாகனங்களில் விழிப்புணர்வு கருத்துக்களை கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியும், ஆட்டோவில் விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிபெருக்கி மூலமாக எடுத்துக் கூறும் விதமாகவும், பலூன்களை பறக்க விட்டும், கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவருடன், பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா, மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேஷ்,

தெற்கு ஒன்றிய செயலாளர் வள்ளூர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ், விவசாய அணி மாநில நிர்வாகி தமிழன் இளங்கோவன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், பொன்னேரி நகரச் செயலாளர் விஸ்வநாதன், கோளுர் கதிரவன், தமிழரசன், காங்கிரஸ் நிர்வாகி டி.எல். சதாசிவலிங்கம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பெரியகவனம் ரவிக்குமார், வாசுதேவன், ராமலிங்கம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed