September 26, 2021

ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் “தனது ஊதியம் முழுவதையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல திட்டங்களுக்கு செலவிடுவேன்” என கூறினார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில், உள்ள ஏழை எளிய முதியோர்களுக்கு காமராஜ் திருமண மண்டபத்தில் இன்று (05.08.2021) காலை 11 மணி அளவில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 3 வது மாத ஊதியத்திலிருந்து 200 முதியோர்களுக்கு நிதி உதவியும் அரிசி பைகளையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் வழங்கினார்.

இந் நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள், இராஜபாளையம் தொகுதியில் புதியதாக தற்போது 472 முதியோர்களுக்கு அரசு முதியோர் உதவித்தொகை வழங்க ஆணை வரப்பெற்றுள்ளது. அதனை அடுத்தவாரம் இராஜபாளையத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்களும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் நேரில் வந்து பயனாளிகளிடம் வழங்க உள்ளார்கள் எனவும்,

தமிழக முதல்வராக பெறுப்பேற்ற இரண்டு மாதகாலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான், என கூறினார்,

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் ஊதியத்தை ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கியது போல் இனிவரும் ஐந்து ஆண்டுகால ஊதியத்தையும் ஏழை எளிய பொதுமக்களுக்காகவும் நலத்திட்ட உதவிகளாகவும் செய்ய உள்ளதாக அதில், முதல்மாத ஊதியத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமாக வழங்கப்பட்டது.

இரண்டாவது மாத ஊதியம் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது, என கூறினார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் மாட்ட நகர ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed