September 26, 2021

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மனித நேயம் மற்றும் நல்லிணக்க கூட்டம் மதுரை மாவட்டம் திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

1 min read
Spread the love

அதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை சரக துணைத் தலைவர் காமினி அவர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்தார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் மதுரை மண்டல இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக நல்லிணக்கம் குறித்தும், சமூகத்தின் ஒற்றுமையை பேணுதல் குறித்தும், ஜாதி ரீதியான உயர்வு தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவும். சமூக வேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகளையும், அதனால் ஒரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

மேலும், ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் பாண்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வட்டாட்சியர் தமிழ் செல்வி, ஒத்தக்கடை காவல் ஆய்வாளர், மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் திருமோகூர் ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடியதற்காக காவல்துறை துணைத் தலைவர் காமினி அவர்கள், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed