September 16, 2021

சோழவரம் அருகே காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி சென்ற 3 சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். காரனோடை பகுதியை சேர்ந்த ரஹமத்(15) அர்ஜுன் (13) மற்றும்
திருவள்ளூர் ஈக்காடு பகுதி சேர்ந்த சத்யா(14)
ஆகிய 3 சிறுவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் மீன்பிடிப்பதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் மூவரும் இரவு வரை வீடு திரும்பாததால், பதறிப்போன அவர்களுடைய குடும்பத்தினர் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆற்றில் சிறுவர்களின் அணிந்திருந்த உடைகள் மற்றும் காலணிகள் அங்கே இருப்பதை கண்ட காவல் துறையினர், செங்குன்றம் தீயணைப்பு துறையினருடன் பல மணி நேரம் தேடி நள்ளிரவில் 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிய சோழவரம் காவல் துறையினர் இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed