September 26, 2021

அம்பத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், அத்திப்பட்டில் முன்னாள் தமிழக- முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி…

1 min read
Spread the love

அம்பத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில்,  86-வது வட்டம் அத்திப்பட்டில் முன்னாள் தமிழக- முதல்வர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி  86-வட்ட செயலாளர் எம்.கமல் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப்சாமுவேல் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அறுசுவை அன்னதானத்தை வழங்கினர்.

இதில் பொறுப்பாளர்கள் பச்சையப்பன், ரவிச்சந்திரன், சிவானந்தம், பாலாஜி, கோபி, டைசன், பிரசாந்த், பார்த்தசாரதி, சாலமன், வேதகிரி, சண்முகம், இராமு, ரகு, ராணி, எல்பிஎப்.மோகன், விமல்ராஜ், ராஜா, தேவராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ப.பாரத்குமார் செய்தியாளர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed