September 16, 2021

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த யோகா ஆசிரியை சந்தியா, கர்ண பத்மாசனத்தில், உலக சாதனை…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் – புஷ்பலதா தம்பதியர் மகள் எஸ்.சந்தியா, (24) அதே பகுதியில், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். எட்டு ஆண்டுகளாக யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். இவர், கர்ண பத்மாசனத்தில், 10 நிமிடங்கள் தொடர்ந்து நின்று புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம், இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் அவரது சாதனையை பாராட்டி வருகின்றனர். யோகா ஆசிரியை சந்தியா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் சாதனை படைத்தவர். கடந்த 2010ம் ஆண்டு, சிங்கபூரில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டில் தங்கம் வென்றவர். போதி தர்மர், திருமூலர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றவர். இவரிடம் பயிற்சி பெற்று வரும், 10 மாணவர்கள், யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed