September 25, 2021

மணலி புதுநகரில், பேராசிரியர் அம்பேத்கர் பிரியன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் எழுதிய 10 புத்தகங்கள் வெளியிடபட்டது…

1 min read
Spread the love

தன் இனத்துக்காகவும் இந்த மண்ணிற்காகவும் தன் உடலில் தீ பாய்ச்சி உயிர் நீத்த பெண்கள் தான் தீப்பாய்ந்த அம்மன் என தெய்வமாக வழங்கப்படுகின்றனர்.மணலி புதுநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா புகழாரம். திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் எழுத்தாளரும், பேராசிரியருமான அம்பேத்கர் பிரியன் எழுதிய 10 நூல்கள் வெளியீட்டு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். சமுதாயத்திற்காக போராடிய தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்த பின் நூல்களை வெளியிட்டார்.

பின்பு பேசிய அவர்; திராவிட சமுதாயத்திற்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவப்படத்தை அஞ்சல் தலையாக வெளியிட ஏற்பாடு செய்தவர் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எனவும் நமது நாட்டில் தன் இனத்துக்காகவும் இந்த மண்ணிற்காகவும் போராடி தன் உடலுக்கு தீப்பாச்சி உயிர்நீத்த குயிலியை தீப்பாய்ந்த அம்மன் எனும் பெயரோடு தெய்வமாக வணங்கி வருகிறோம் எனவும் பெண்ணியத்திற்கு புகழாரம் சூட்டினார். பின்னர் நூல்களை வெளியிட்ட அம்பேத்கர் பிரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இன்னும் பல படைப்புகளை உருவாக்க ஆயுள் வேண்டியும் வாழ்த்திப் பேசினார்.

அதே போல், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் பேசிய போது ” ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது உழைத்த சுந்தரனார் அவர்கள் உடன் நின்று சமூகத்திற்காக போராட துவங்கிய தோழர் அம்பேத்கர் பிரியன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் அவர் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது பற்றி அன்பு சகோதரர் மல்லை சத்ய அவர்கள் பட்டியலிட்டார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு புத்தகத்தை எழுதுவதே மிகவும் சிரமமானது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சோர்வாக இருக்கக்கூடிய இந்த நிலையிலும், தனது 69வது பிறந்தநாளில் 10 புத்தகத்தை வெளியிடும் தோழர் அம்பேத்கர் பிரியன் அவர்களை பார்த்து நாம் பிரமிப்புடன் பார்க்க கூடிய நிலை உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே சமுதாயத்திற்காக எழுதக்கூடிய இவரைப் போன்ற எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். என பேசினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாவட்டச் செயலாளர் மெய்யழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் செயலாளராக பணியாற்றியவரும், மூத்த பத்திரிகையாளருமான ராமலிங்கம், சின்னத்திரை நடிகை
அபயம் லெமூரியன், மாமல்லன், ஆகியோரும் புத்தகங்களை வெளியிட்டனர். அதனை கொண்டகரை ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வெள்ளி வாயில் ஊராட்சி மன்ற தலைவர் உமையாள் பொன்.பாஸ்கர், சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் அமன்டா மெலொடி, அஸ்வினி உள்ளிட்டவர்கள் நூல்களை பெற்றுக் கொண்டனர். செல்வராசு, சுப்பிரமணி, நாகராஜ், மேலூர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed