September 26, 2021

100 நாள் சாதனையாக விடியலை கொடுப்பாரா முதல்வர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்பார்ப்பு…

1 min read
Spread the love

திமுகவின் தேர்தல் அறிக்கை, உங்கள் தொகுதி ஸ்டாலின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
பணிநிரந்தரத்திற்கு காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள். 11வது கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் தங்களுக்கான பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையிலும் சேர்த்து வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே தங்களது கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:- முதல்வர், கல்வி அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு நிகழ்ச்சிக்கு வருகை புரியும் போது பணி நிரந்தரம் செய்ய கேட்டு கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறோம். ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி அரசுக்கு கோரிக்கை வைத்தும் உள்ளார்கள். பட்ஜெட்டிலேயே முதல்வர் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு நியமித்த 16,549 பேரில், இப்போதுள்ள 12ஆயிரம் பேருக்காக, வாழ்வாதாரம் வேண்டி, திமுக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 5 வருடம் வேலை செய்தால் போதும் என்று கோயில் பணியாளர்களை நிரந்தரம் செய்ய உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துவிட்டார்.

K

ஆனால், கல்வித்துறையில் நாங்கள் 10 கல்வியாண்டையே முடித்து விட்டோம்.
இப்போது 11வது கல்வியாண்டு தொடங்கிவிட்டது. இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம். மேலும் இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்ட சூழலில் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தொகுப்பூதிய ஆசிரியர்களின் குடும்பங்கள், வாழ்வாதாரம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தற்போது பணிபுரியும் பணியிடங்களிலேயே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டு வருகிறோம். எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தார்.
அது போலவே தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிரந்தரம் செய்திட வேண்டும் என்றார். ஆட்சிக்கு வந்த 100 நாளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்பதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம்.
எல்லோருக்கும் எண்ணற்ற அறிவிப்பை வெளியிடும் போது “எங்களுக்கும் ஒரு விடியலை தாருங்கள்” என்றார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed