September 26, 2021

புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறி வந்த ஐந்து வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

1 min read
Spread the love

தென்காசி மாவட்டம், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று (10.08.2021) சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கேரளாவிலிருந்து மீன் லோடு ஏற்றி வந்த வாகனங்களில் அதன் கழிவுநீர் சாலையில் விழுமாறு வந்த மூன்று வாகனங்களுக்கு தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஜல்லி ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு தலா 2,000 மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் இருக்கும் எடைக்கு ஏற்றாற்போல் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

சார்பு ஆய்வாளரின் இத்தகைய கடும் நடவடிக்கை மூலம் தற்போது புளியரை சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் முறையாக செல்வதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed