September 16, 2021

வடசென்னை அனல் மின் நிலைய 4வது அலகு திட்டபணிக்காக, கொசஸ்தலை ஆற்றில் மண் கொட்டிய பிரட்சனையில், மீனவர் போராட்டத்திற்கு வெற்றி…

1 min read
Spread the love

தமிழ்நாடு மின்வாரியம், ஊரணம்பேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வடசென்னை அனல் மின் நிலைய 4-வது விரிவாக்க பணிகளுக்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி எடுத்து செல்லும் கண்வேயர் பெல்ட் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை எண்ணூர் வழியாக செல்ல கூடிய பக்கிங்கேம் கால்வாயில் மேற்கொண்டு உள்ளது. அதற்காக அந்த கால்வாயில் மண்கள் கொட்டப்பட்டு வந்தது.

இதனால், அந்த கால்வாய் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், அலையாத்தி காடுகள் அழிந்து மீன்வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, எண்ணூர் மீனவர்கள் கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மின்வாரியம் சார்பில், பக்கிங்கேம் கால்வாயில் ஏற்கனவே கொட்டப்பட்ட மண்களை அள்ளும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன.

கால்வாயின் நீர்வழி தடத்தில் கொட்டப்பட்ட மண்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏற்றி வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இன்னும் 10 நாட்களில் ஆற்றில் கொட்டப்பட்ட மண் முழுமையாக அகற்றப்படும் எனவும், மாற்று வழியில் கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும் வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed