September 25, 2021

ராஜபாளையம் அருகே, செட்டியார்பட்டி பேரூராட்சியில், குளிர்சாதன வசதியுடன் கட்டப்படும் திருமண மண்டபத்தை, எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி புத்தூர் மெயின்ரோட்டில், விஐபி நகரில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் அமைக்கும் இடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்களும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்களும் இன்று (11.08.2021) மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள், சாதாரண ஏழை-எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1000 நபர்கள் அமரும் வகையிலும் 300 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தக்கூடிய வகையிலும் இம்மண்டபம் அமைக்கப்பட உள்ளது எனவும் அதனை தொடர்ந்து சேத்தூர் பேரூராட்சி பகுதிகளிலும் இராஜபாளையம் நகர் பகுதிகளிலும் இதுபோல் மிகப்பெரிய திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளது எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா கிராம நிர்வாக அலுவலர் சுந்தராஜன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மாவட்ட பிரதிநிதி கலைவானர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed