September 16, 2021

தமிழகத்தில், முன்னாள் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலருக்கு சொந்தமான 4,000 கல் குவாரிகள் அனுமதியின்றி இங்குகின்றன…

1 min read
Spread the love

தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்காக காலம் காலமாக ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆற்று மணல் அதிக அளவில் எடுக்கப்படுவதால், இயற்கை வளங்கள் அழிவதுடன், நிலத்தடி நீர் பாதிப்பும் ஏற்படுகிறது, என்ற காரணத்திற்காக மலைகளை உடைக்கப்பட்டு வரக்கூடிய எம்.சேண்டை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும், என அரசால் அறிவுரை வழங்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனிநபர் ஒவ்வொருவரும் எம். சேண்டை பயன்படுத்தியே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளபட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஆற்றில் மணல் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டு கல் குவாரிகளில் இருந்து வரக்கூடிய எம் சாண்ட் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது தமிழக முதல்வரில் துவங்கி துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகள் என அனைவரும் தமிழகத்தில் தங்களுக்கு சொந்தமாக கல்குவாரிகள் எடுத்து நடத்தி வருகின்றனர். தமிழக அரசால் அனுமதி பெற்று நடத்தக் கூடிய கல்குவாரிகள் வெறும் 353 மட்டுமே. ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் 4,000 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசினுடைய எந்த அனுமதியும் இன்றி நடத்தப்படுகின்றன.

நீதியரசர் கிருபாகரன் அவர்கள் ஏற்கனவே, கல் குவாரிகள் நடத்தபடுவது குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், ” ஆற்று மணலை பயன்படுத்தினால், சில காலத்தில் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் திரும்பவும் மணல் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், மலையை உடைத்து எம்.சேண்டை கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்துவதால் தமிழகம் முழுவதும் மலைகள் அழியக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் அந்த மலைகளை யாராலும் உருவாக்கிவிட முடியாது. மலையையும், மலை சார்ந்த இயற்கை வளங்களையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு எம்.சேண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் அவர்கள் நம்மிடம் கூறுகையில்; கடந்த ஆட்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீதியரசர்கள் யாருடைய அறிவுரைகளையும் காதில் வாங்காமல் அவர்களுடைய மனம் போன போக்கில் இயற்கை வளங்களை எல்லாம் அழித்து கல்குவாரிகள் நடத்தி வந்தனர். அந்த குவாரிகளில் இருந்து எம்.சேண்டை ஏற்றிக்கொண்டு செல்லக்கூடிய லாரிகளை போலீசாரும், அதிகாரிகளும் மடக்கி பொய் வழக்கு போடுகின்றனர். அதில், ” லாரி ஓட்டுநர் எந்த அனுமதியும் இன்றி இயற்கை வளங்களை அழித்து எம்.சேண்டுகளை ஏற்றிச் செல்வதாக பொய் வழக்கு போடுகின்றனர்.” உண்மையில் இயற்கை வளங்களை அழிப்பது யார்? மலைகளை வெடிவைத்து தகற்ப்பது யார்? அந்த வெடிபொருட்கள் எப்படி கிடைக்கின்றன? குவாரிகள் எந்த அனுமதியோடு நடத்தப்படுகின்றன? இவைகளை எல்லாம் நன்கு அறிந்த அதிகாரிகள் தான், அப்பாவி லாரி ஓட்டுநர் மீது பொய் வழக்கு போடுகின்றனர்.

தமிழகத்தில் இப்படி எந்த அனுமதியும் இன்றி நடத்தப்படும் கல் குவாரிகளால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் ஆண்டுக்கு 10,000 ம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் தரமில்லாத எம். சேண்டுகளை கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமில்லாத பொருட்களை கொண்டு கட்டிடங்கள் கட்டுவதால், சில ஆண்டுகளுக்கு முன்பாக மவுலிவாக்கத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது போல், தமிழகம் முழுவதும் பல கட்டிடங்கள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு , தரமான எம்.சேண்ட்களை தமிழக அரசே முன்நின்று விற்பனை செய்தால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், மக்களுக்கு தரமான எம்.சேன்ட்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நான் பொதுப்பணித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் காவல்துறை உயரதிகாரிகள் போன்ற அனைவரையும் நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளேன், என தெரிவித்தார்.

G.பாலகிருஷ்ணன் நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed