September 16, 2021

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், கஞ்சா போதையில் இளைஞர் ரகளை, வேடிக்கை பார்த்த போலிஸ், அடித்து உதைத்த பொதுமக்கள்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களை விரட்டி அடித்தும், கொய்யா வியாபாரம் செய்த மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், ரகளையில் ஈடுபட்டதுடன், கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கிரிக்கெட் விளையாடுவது போன்று கூடையையும் பேருந்து நிலையத்தில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்தான்.

அங்கு பெண்கள் கூடையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பழங்களை எல்லாம் நாசம் செய்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை உடைத்து அட்டகாசம் செய்த இளைஞரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர், அரை மணி நேரம் கஞ்சா போதையில் ஆட்டம் போட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மிக நகரமான திருண்ணாமலை நகருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வதற்காகவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம், இப்படிப்பட்ட ஆன்மிக நகரில் அமைந்துள்ள நகர மத்திய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை விரட்டி அடித்து அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் ஆன்மீக நகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையத்திற்கு வந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் இளைஞரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed