September 16, 2021

திருவண்ணாமலையில், ஒரு மாதம் மேலாக குடிநீர் விநியோகம் செயல்படாத நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெரு, சன்னதித் தெரு, துராபலி தெரு,
திருநாவுக்கரசர் தெரு, ராமலிங்கம் தெரு, ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சியை கண்டித்து சன்னதி தெருவில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இனிவரும் காலங்களில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பெண்கள் சாலை மறியல் கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed