September 16, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகள் வழங்கினார்…

1 min read
Spread the love

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், அவர்கள் உடனிருந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள், சிறப்பாக பணியாற்றிய மைக்காக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் செங்குட்டுவன், சிறப்பாக பணியாற்றியமைக்கான விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.முருகேஷ், இன்று சுதந்திர தின விழாவில் வழங்கினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed