September 25, 2021

தென்காசி மாவட்டத்தில்,75 வது சுதந்திர தினம், காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது…

1 min read
Spread the love

நம் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி, காவல் ஆய்வாளர் பிரபு அவர்கள் தலைமையிலான தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர், வனத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் NCC மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed