September 26, 2021

புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன் கொடியேற்றினார்…

1 min read
Spread the love

புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன் தலைமை தாங்கி ஊராட்சி அலுவலகம், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஆகிய இடங்களில் மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதணைத்தொடர்ந்து ஸ்ரீ செல்ல விநாயகர் நகர் குடியிருப்போர் நலச் சங்க பெயர் பலகையை  சமூக சேவகர்  கல்விநாதன் திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துரையாற்றினர்.

அதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்விமதுரைமுத்து, அழிஞ்சிவாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed