September 25, 2021

ஆவடியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போக்குவரத்து காவலருடன் இணைந்து தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு உதவிகளை வழங்கினர்…

1 min read
Spread the love

ஆவடி பேருந்து நிலையம் அருகே, இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நியூ ஜென்ரேஷன் அறக்கட்டளை மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் துறை இணைந்து ஏழை-எளியோர்களுக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் லெனின், ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டு ஆவடி சுற்றுவட்டார ஏழை-எளியோர்களுக்கு அறுசுவை அன்னதானம் மற்றும் முகக்கவசங்கம் போன்றவற்றை வழங்கி கொரோனா தொற்று தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் உதவி ஆய்வாளர்கள் பழனிவேல், பாஸ்கர், அமுல்ராஜன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கணேஷ், நாகராஜன், விநாயகமூர்த்தி, சண்முகசுந்தரம், சசிகுமார், சோபா, லட்சுமிபதி, நெடுஞ்செழியன், புனிதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அம்பத்தூர் வட்டாசியர் அலுவலகத்தில் ,இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடை பெற்றது.

அம்பத்தூர் வட்டாசியர் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடை பெற்றது. விழாவிற்கு தலைமையிட துணை வட்டாசியர் மன்சூர் அலி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் வருவாய் ஆய்வாளர் ராம்நாத், கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், நாராயமூர்த்தி, கிராம ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் உட்பட வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed