September 25, 2021

திருவண்ணாமலை நகரில், கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று ஆகஸ்ட் 16 முதல், திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி பகுதியில் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறந்திருக்க வேண்டும் எனவும்,

மாலை 5 மணிக்கு மேல் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும், உணவகத்தில் உட்கார்ந்து உணவு அருந்த அனுமதி இல்லை எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அனைத்து கடைகளும் 5 மணிக்கு மூடப்பட்டன.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed