September 26, 2021

“திருச்சியில் நடைபெற்று வரும் கொடுமை சம்பங்களை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” திருச்சி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…

1 min read
Spread the love

திருச்சியில் கணவரை இழந்த வனஜா என்பவர் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். சைக்கிளில் சென்று அலைந்து தன் வியாபாரத்தை வளர்த்த இவர் அதன்பிறகு தள்ளு வண்டியில் வியாபாரம் செய்ய துவங்கினார். ” அக்கா கடை ” என்ற பெயரில், இயற்கை உணவு தானியங்களை சேகரித்து பல வகையான தரமான உணவுகளை கொடுக்கும் சூழலில், இவருடைய வியாபாரம் வளர்ச்சி அடைந்தது.

இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காவல்துறை பின்புலத்தில் சற்று முன்பு அவருடைய கடையை தகர்த்து அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். சக வியாபாரிகள் பொய் புகார்கள் அளித்த நிலையில் இந்த அராஜக செயல் நடைபெற்றதாக தெரிகிறது. இதன் உண்மை நிலையை திருச்சி காவல் ஆணையர் உடனடியாக விசாரிக்க உத்தரவிடவேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளை வளர்க்க இரவு பகலாக கடந்த 18 வருடங்களாக, உண்மையாக உழைத்து, சுய மரியாதையுடன் வாழ்ந்து வரும் சகோதரி வனஜா அவர்களுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும். திருச்சியில் உள்ள வியாபாரிகள் சங்க தலைவர்கள் அப்பாவிப் பெண் நிலையை உணர்ந்து சக உணவகங்களை நடத்தும் அந்த பகுதி வியாபாரிகளை அழைத்து பேசி ஞாயம் வழங்க வேண்டும். இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்தில் வாழும் சகோதரி வனஜா குடும்பத்திற்கு திருச்சி காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூரையாடப்பட்வைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed