September 26, 2021

திருவண்ணாமலை நகராட்சி துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த கோரி, நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் பணியாற்றிவரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கையும், தனியார் வசம் உள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நகராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் எனவும், பல வருடங்களாக சுகாதார ஆய்வாளராக நகராட்சியில் பணியாற்றும் ஆய்வாளர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த 15 ஆண்டு காலமாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக 270 பேர் வேலை செய்து வருகின்றனர், இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த துப்புரவு பணியாளர்களை, “சுழற்சி முறையில் 150 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 120 பேருக்கு வேலை கொடுக்க முடியாது.” என்று தனியார் ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 270 பேர் கடந்த 15 ஆண்டு காலமாக நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தனியார் வசம் உள்ள ஒப்பந்தத்தை நீக்கிவிட்டு நகராட்சி நிர்வாகமே துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்தி வேலை வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக தொடர்ந்து நகராட்சி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் வேண்டும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed