September 26, 2021

தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில், கொரோனா மற்றும் குழந்தை திருமணம் குறித்து தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read
Spread the love

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நம் நாட்டில் கொரோனா தொற்றின் 3 அலை பரவல் துவங்க கூடிய சூழல் உள்ளதால், அனைவரும் வெளியே செல்லும் போது முகக்கவசம், மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

மேலும், ” 18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்தின் படி குற்றமாகும். அப்படி செய்யும் குழந்தையின் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed